வயதாகிவிட்டது


என் தூக்கத்திற்கும்

வினோத சொர்பனங்களுக்கிடையில்

அரற்றி அரற்றிப் புரள

நசுங்கிக் கிடக்கின்றன தலையணைகள்

தரையில் தாள் நகர்கிற சப்தத்திற்கும்

புத்தங்கள் சிறகடிக்கிற நுட்பத்திற்கும்

பதைத்ததும் விழித்ததும் எழுகையில்

கண்காணாமல் போய்விட்டிருக்கிறது

இருளில் கரைந்த இசைரூபம்

யார் யாரைக்கைவிட்டர்கள் உங்களில் என்று 

நகரும் முட்களால் கேள்வி கேட்டு

அப்பால் செல்கிறது காலம்

29.01.2016

Comments