ஔவைப் பாட்டியும் Kellogg's crunchy nuts உம்


"பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை நாளும் கலந்து உனக்கு" என்று ஔவை பாட்டி பாடியிருப்பதை இருப்பதை 20 வருடங்களில் குறைந்தது 200 தடவைக்கு மேல் கேள்விப்பட்டு இருக்கிறேன் ஏதேதோ வழிகளில் மீண்டும் மீண்டும் அறியப்பட்டிருக்கிறேன். பள்ளிக்காலத்தில் ஆசிரியர் சொன்ன போதும், மனப்பாடம் செய்த போதும், ஆங்காங்கே வீட்டு பூஜைகளில் பாடிய போதும், எல்லாமே பக்தி என்று சிறுவயதில் அதீத ஆர்வக்கோளார்கள் இருந்தபோதும் வீட்டிலிருந்த பக்தி பாடல்கள் புத்தகங்களில் பாடிய போதும், இணையத்தில் முகநூலில் அவ்வப்போது வரும் feedகளை பார்த்த போதும் என ஔவையின் இந்த பாடல்களை நினைவுக்கு கொண்டிருக்கிறேன்

எதேச்சையாக இன்று கூட இந்தப் பாடலை ஞாபகப்படுத்தும் போது முழுமையான பாடல் இயல்பாகவே வந்து சேர்ந்தது எனில் நான் ஒரு வகையில் பாக்கியசாலி தான் ஏனைய நல்வழிப் பாடல்கள் எல்லாம் ஞாபகம் இருக்கிறதா? என்றால் தெரியாது ஆனால் இது மட்டும் மிகச் சரியாக ஞாபகம் இருக்கிறது 


இந்தப் பாடலின் புரிதலின் இன்னொரு பரிமாணத்தை தற்செயலாக இன்று,அறிய முடிந்தது.

பொதுவாக இன்றைய காலத்தில் Kelloggs,Oats என பலரும் பல நவீன உணவின் பின் போய்க் கொண்டிருக்கின்றோம் அப்படியான காலத்தில் இந்த மாதிரியான உணவை cereal என வகைப்படுத்தி பெட்டிகளில் அடைத்து விடுகிறார்கள் இதற்குள் பால், தேன் இட்டு சாப்பிட ஊக்குவிக்கிறார்கள்.

இவ்வாறு ஊக்குவிக்க, விளம்பரங்கள் பெரிய பேனர்கள் என பல இடங்களில் காட்சிப்படுத்தப்படுகிறது அத்தோடு cereal இனது packing label களிலும் இதற்கான படத்தை காண முடியும்.

 அப்படி எதேச்சையாக kellogs crunchy nut இனது படத்தை பார்த்தேன் ஒரு கிண்ணத்தில் ‌crunchy nut இருக்கிறது பால் தேன் காண்பிக்கப்படுகிறது

வழமையாக தினசரி பார்க்கும் இவை இன்றைக்கு ஒரு பாட்டியின் கையில் இருப்பதாக கற்பனை செய்து கொண்டேன், அப்போது தான் ஔவை எழுதிய இந்தப் பாடல் ஞாபகத்துக்கு வந்தது

பாட்டி பாடலில் பாடிய அதே உணவு இங்கேயும் இருக்கிறது இந்த உணவு அந்த காலத்திலும் இருக்கிறது இந்த காலத்தில் இருக்கிறது என்பதை எல்லாம் பொது பார்வைக்கு சரியாக இருக்கிறது. மேலும் பாட்டி வாழ்ந்த காலத்தில் இந்த எளிய உணவுகள் கிடைக்கக் கூடியதாக கூட இருந்திருக்கலாம். 

 ஆனால் இதில் பார்க்க வேண்டியது இந்த உணவுகளின் தொகுப்பு (food combination/value addition) பெறுமதி சேர் உணவாக பாட்டி அந்த காலத்தில் அடையாளம் கண்டுள்ளார் அதனால் தான் பிள்ளையாருக்கு தருவதாக கூறி தனக்கு சங்கத்தமிழ் தா என்று கேட்டுள்ளார்.

இறைவனால் செய்ய முடியாதது என்று எதுவும் இல்லை அப்படியிருக்க இறைவனிடம் அருளை பெற அவருக்கு சிறந்தவற்றை கொடுக்க வேண்டும் என்பதுதான் பொது புத்தி,ஆக இந்த உணவுத் தொகுப்பு பெறுமதியானது என அவ்வை உணர்ந்திருக்கிறார்.

உணவில் உள்ள போசணை சத்துக்களின் அளவை அறிந்து கொள்ளவும் அதன் போசணைப் பெறுமதியை அதிகரிக்கவும் 18 ஆம் நூற்றாண்டில் தொடங்கி இன்றுவரை அதற்கான செயல்முறைகள் நீண்டு கொண்டு தான் இருக்கின்றது. அதற்காக பல பரிசோதனைகள் ஆய்வு கூட ஆராய்ச்சிகள் என நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது ஆனால் பாட்டியின் இந்த உணவு பற்றிய அறிவு எப்பதோ உருவாக்கப்பட்டது அவரது பாடல் இடம்பெற்ற இந்த தொகுப்பு நல்வழி என்பதாகும்.

 உணவின் பெருமதியை அறிவித்து ஆரோக்கியமாக வாழ்வதற்கு பாட்டியின் பிற நல்வழியையும் அறிவியல் கண்ணோட்டத்தில் பார்த்தால் இன்னமும் பல நல்வழிகள் பிறக்கலாம்...

Rajeevan Ravinathan 

Comments