இலங்கையில் விவசாய இரசாயண மாபியா




தொடர்ச்சியாக விவசாயத் திணைக்களத்தினது தவறுகளை நான் எழுதியும், சிறு சிறு காணொளி வடிவிலும் வெளிப்படுத்தி கொண்டிருக்கிறேன். அந்த வகையில் விவசாய இரசாயண பொருட்களது மாபியா தொடர்பாக இன்று எழுதுகிறேன்.
இலங்கையில் விவசாய இரசாயணங்கள் யாவும் இறக்குமதி செய்யப்படுபவையே. மல்டி நேசனல் கம்பனிகள் இவற்றை இலங்கைக்கு வழங்குகின்றன. முன்னாள் ஐனாதிபதி சேதன விவசாய திட்டம் என்ற ஒன்றை ஆரம்பித்த தன் விளைவாக நாட்டிற்குள் அனுமதிக்கப்படாத பல இரசாயணங்கள் உளாவின. யூரியா ஒரு பைக்கெட் 40000-100,000 வரை சென்றது. யூரியா என்று கூறி அமோனியம் சல்பைற் விற்பனை செய்யப்பட்ட சம்பவம் கூட நடந்தது. இந்த நேரத்தில் கூட விவசாய உத்தியோகத்தர்கள் கைகள் கட்டப்பட்டே இருந்தது.
நாடு கையறு நிலையில் நின்றது.
விவசாயிகள் கை பிசுபிசுத்தது.
விவசாய உத்தியோகத்தர்கள் கை கட்டி நின்றனர்.
காலம் மாறியது ஆனால் காட்சி மாறவில்லை.
கடந்த மே மாதம் 10 நாட்கள் இலங்கைக்கு சென்றிருந்தேன்.
அதன் போது சில காட்சிகளை கவனித்தேன், புதிய புதிய பெயர்களில் பலதரப்பட்ட விவசாய இரசாயணங்கள், விவசாய இரசாயனம் விற்கும் கடைகளை ஆக்கிரமித்துள்ளது. பல உள்ளுர் கடைகளில் தரக்குறைவான விவசாய இரசாயணங்கள் விற்கப்படுவதை அவதானிக்க கூடியதாக இருக்கிறது.பூரண சேதன விவசாயக் கொள்கையால் புதிய இரசாயணங்கள் விற்கும் கடைகள் உருவாகியிருக்கின்றன. ஆனால் இவற்றில் வேலை செய்யும் எவருமே இரசாணயங்களது தன்மை தொழிற்படும் விதம் பற்றி எதுவும் அறியாதவர்கள் ஆனாலும் விவசாயத்திணைக்களத்தினால் வழங்கப்பட்ட அனுமதிச் சான்றிதழ் மாத்திரம் உள்ளது.
இவ்வாறு விற்கப்படும் இரசாயனங்கள் பல நேரங்களில் தரமற்றது ஒழுங்குபடுத்தப்படாதது, செறிவு குறைக்கப்பட்டது,
இதற்கு மறுபுறம் வடமாகணத்தில் மாத்திரம் 80 இற்கும் பீடைகொல்லி விற்பனை தொடர்பாக கண்கானிக்கும் அதிகாரம் உள்ள உத்தியோகத்தர்கள் உள்ளனர்.


பீடைகொல்லிகளை விற்பனை செய்யும் முகவர்களை பரிசோதிக்கவும் சட்டத்திற்கு மீறி விற்பனை செய்யும் விற்பனையாளருக்கு எதிராக வழக்கு தொடரவும் வழக்கினை கண்காணிக்கும் அதிகாரமும் இவர்களுக்கு உண்டு.
இந்த அதிகாரம் இலங்கை விவசாயத்திணைக்களத்திற்கு கீழாக அமைகின்ற பீடைகொல்லி பதிவாளர் பணிமனையினால் 1980 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க பீடை கொல்லிகளை கட்டுப்படுத்தும் சட்டத்தின் 24 அ (1) உப பிரிவின் கீழ் வழங்கப்படுகிறது.
1980 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க பீடை கொல்லிகளை கட்டுப்படுத்தும் சட்டத்தின் 24 அ (1) உப பிரிவு கூறுவது என்ன என்றால் "Every person who contravenes or fails to comply with any provision of this Act or any regulation made thereunder shall be guilty of an offence under this Act and shall on conviction by a Magistrate be sentenced to imprisonment of either description for a period of two years"
1980 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க பீடை கொல்லிகளை கட்டுப்படுத்தும் சட்டத்தின் எந்த விதியையும் அல்லது அதன் கீழ் செய்யப்பட்ட எந்த ஒழுங்குமுறையையும் மீறும் அல்லது பின்பற்றத் தவறிய ஒவ்வொரு நபரும் இந்தச் சட்டத்தின் கீழ் குற்றவாளியாவார் மேலும் ஒரு நீதவானினால் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும்.
இந்த சட்டம் மேலும் கூறுவது என்ன என்றால் 14 உப பிரிவின்படி
No person shall manufacture,Formulate, pack or distribute, sell, offer for sale or deliver within the country, any pesticide unless. such pesticide is registered and a valid licence or a provisional permit is obtained from the Registrar
பூச்சிக்கொல்லியைப் பதிவுசெய்து, பதிவாளரிடமிருந்து செல்லுபடியாகும் உரிமம் அல்லது தற்காலிக அனுமதி பெறப்பட்டாலன்றி, எந்தவொரு பூச்சிக்கொல்லி மருந்தையும் யாரும் உற்பத்தி செய்யக்கூடாது, உற்பத்தி செய்ய தடை. எந்தவொரு பூச்சிக்கொல்லி மருந்தையும் வடிவமைத்தல், பேக் செய்தல் அல்லது விநியோகித்தல், விற்பனை செய்தல் அல்லது நாட்டிற்குள் வழங்குதல் அல்லது வழங்குதல் குற்றம்
16 உப பிரிவின்படி சட்டம் கூறுவது என்ன என்றால்
No person shall store, transport, sell or offer for sale any pesticide in close juxtaposition with foodstuffs or in any such manner as would result in the contamination of such foodstuffs
எந்தவொரு நபரும் எந்தவொரு பூச்சிக்கொல்லி மருந்தையும் உணவுப் பொருட்களுடன் நெருக்கமாக அல்லது அத்தகைய உணவுப் பொருட்களை மாசுபடுத்தும் வகையில் சேமித்து வைக்கவோ, கொண்டு செல்லவோ, விற்கவோ அல்லது விற்பனைக்கு வழங்கவோ கூடாது.
மேலோட்டமாக பார்த்தால் இவர்களுக்கு வழங்கப்பட்டது பெரிய அதிகாரம் போல இருக்கும் ஆனால் நடைமுறையில் ஒரு அதிகாரமும் இல்லை. சான்றிதழ் இருக்கிறதா இல்லையா இது தான் இதிகாரம் சான்றிதழ் இருந்தால் சரி. இல்லாதவர்களை பிடித்து சான்றிதழுக்கு பதிய வைப்பது அல்லது தற்காலிக சான்றிதழுக்கு என 550 ருபாய் பணம் வாங்கி இலங்கை வங்கியில் பீடைகொல்லி பதிவாளர் பணிமனை என்ற பெயரில் கணம் வைப்பிலிடுவது அவ்வளவு தான்.
இதற்கு ஒரு ஐடியை கொடுத்துள்ளார்கள். இது கூட தவறு செய்பவர்களை காப்பாற்ற உருவாக்கப்பட்ட கட்டமைப்பு தான். இதனை வழங்கப்பட்ட ஐடியில் உள்ள தகவலின் படியே கூறுகிறேன். இந்த 24 உப பிரிவின் படி செயல்படக்கூறுகிறது. 24 உப பிரிவு கூறுவது


இந்தச் சட்டத்தின் கீழ் குற்றத்தை ஒரு வியாபார கம்பனியின் நபர் செய்திருந்தால்
(அ) ​​அந்த நபர்களின் அமைப்பு ஒரு நிறுவனமாக இருந்தால், அந்த அமைப்பின் ஒவ்வொரு இயக்குனர்இ மேலாளர்இ செயலாளர் அல்லது அதிகாரி; அல்லது
(ஆ) அந்த நபர்களின் அமைப்பு ஒரு நிறுவனமாக இருந்தால், அந்த நிறுவனத்தின் ஒவ்வொரு கூட்டாளியும்இஅந்தக் குற்றத்தின் குற்றவாளியாகக் கருதப்பட வேண்டும்:
எனினும் அத்தகைய குற்றம் தனக்குத் தெரியாமல் செய்யப்பட்டதாகவோ அல்லது குற்றச் செயல்களைத் தடுப்பதற்கு அவர் தகுந்த கவனத்துடன் செயல்பட்டதாகவோ நிரூபித்தால், அத்தகைய நபர் குற்றவாளியாகக் கருதப்பட மாட்டார்.
விவசாய மாபியா என்பது வெளியில் எங்கும் இல்லை.அரசாங்கமே தான் இந்த மாபியாவுக்கான திறவுகோல்.அரசாங்கமே சட்டம் இயற்றுகிறது அதிலிருந்து எப்படிதப்பிக்கலாம் என்பதையும் அரசாங்கமே கூறுகிறது.
குற்றம் தனக்குத் தெரியாமல் செய்யப்பட்டதாகவோ அல்லது குற்றச் செயல்களைத் தடுப்பதற்கு அவர் தகுந்த கவனத்துடன் செயல்பட்டதாகவோ நிரூபித்தால் இந்த ஒரு வசனம் போதும் தங்களது விவசாய இரசாயணத்தில் தவறு இல்லை என்று நிருபிக்க.
இதனை எனது அனுபவம் வாயிலாகவே கூறுகிறேன் சூரிய குமார் எனும் விவசாயி நானாட்டானில் லக்சி காட்வேயரில் 3 ஆம் நாள் புல்லுக்கு அடிக்கும் இரசாயணம் வாங்கி அடித்தார். சரியான அளவு சரியான விசிறும் முறை ஆயினும் புல் கட்டுப்படுத்தப்பட இல்லை. வாங்கிய இரசாயணத்தின் மீதியையும் பில்லையும் பத்திரமாக கொண்டு வந்தார்( அமைப்புத் தலைவர் என்றவகையில் சட்டநடைமுறைகள் தெரிந்தவர்)
குறித்த இரசாயணக் கம்பெனியினரின் நானாட்டான் பகுதிக்கு பொறுப்பானவரிடம் தகவலை பரிமாறினேன், அடுத்த நாள் பகுதிக்கு பொறுப்பானவருடன் களத்திற்கு சென்றேன்இ வயலை பார்வையிட்டார்கள் மழை பெய்திருக்கலாம் என்றார்கள் ஆனால் அந்த கிழமையில் மழை இல்லை. அளவில் தவறு என்றார்கள் மீதி உள்ளது அதிலிருந்து பகுதியளவு சாம்பிள் தர கேட்டார்கள் வழங்கினோம்.
விவசாயி என்னிடமே மீதி இரசாயணத்தை தந்துவிட்டார் (கிட்டத்தட்ட 2 வருடம் அதை நான் வைத்து இருந்தேன்)
சில மாதங்களுக்குப்பிறகு கம்பெனிகாரர் நீங்கள் வாங்கிய கடைக்காரர் எங்களது டீலர் இல்லை இவர் யாரிடம் இருந்து வாங்கினார் எனத்தெரியாது காத்தான் குடியிலிருந்து வந்த பொருளாக இருக்கலாம் என்றார்கள்.
ஆனால் லேபிளில் குறித்த கம்பெனியின் சின்னம், பெயர் ,இரசாயன பெயர் ,தொடர் இலக்கம் என எல்லாமே இருந்தது.
அது fake product எனில் அது தொடர்பாக அவர்களால் கூட வழக்கு தொடர முடியும் ஆனால் அப்படி நடக்க இல்லை.
இது தான் அந்த குற்றம் தனக்குத் தெரியாமல் செய்யப்பட்டதாகவோ அல்லது குற்றச் செயல்களைத் தடுப்பதற்கு அவர் தகுந்த கவனத்துடன் செயல்பட்டதாகவோ நிரூபிப்பது.
குறித்த கடைக்கு அதுவரை அனுமதி பத்திரம் கூட இல்லை அதனால் அப்போதைய பிரதி மாகாணப்பணிப்பாளர் சுக்குருவிடம் இதனை முழுமையாக கூறி விளங்கப்படுத்தியிருந்தேன் எழுத்து வடிவிலும் வழங்கி இருந்தேன்.
களப்பயணம் என்று ஒரு நாள் வந்தார் கடையை பார்த்தார் போனார் அடுத்த கிழமை கடைக்கு போகும் போது கடையில் தற்காலிக அனுமதிப்பத்திரம் இருந்தது.
சரி இது மத்திய அரசாங்கம் தானே எப்படி மாகாண விவசாயத்திணைக்களம் பங்கு கொள்ள முடியும் என்றால்
இவற்றின் அடிப்படை சான்றிதழ் விற்பனை சான்றிதழ் வழங்குவது தான் இதற்கான முனைப்பை எடுப்பது மாகாண விவசாய த் திணைக்களம் தான் அதே போல் வழங்கிய சான்றிதழை குற்றத்தின் பெயரால் தடுக்கவும் முடியும்.
விவசாய இரசாயணம் விற்பனை அனுமதிக்கென ஒழங்குமுறை உண்டு
1. விற்பனை செய்பவர் NVQ அல்லது அதற்கு சமமான கற்கை நெறி பயிற்சி பெற்றிருக்க வேண்டும்
2. வயதெல்லை (18-60)
3. சேமிப்பு இடம் பாதுகாப்பானதாக இருக்க வேண்டும்
4. தனியான விற்பனை இடமாக இருத்தல் வேண்டும்
தகுதி இல்லாத விற்பனையாளர்களுக்கு சான்றிதழை வழங்காமல் விடலாம்.
முடியும் ஆனால் செய்ய மாட்டார்கள்
காரணங்கள் பல
1. கையூட்டு
2. விவசாய உத்தியோகத்தர்களே விற்பனையாளர்கள் தான்.
3. விவசாய உத்தியோகத்தர்களது குடும்பத்தினர் சொந்தகாரர் விற்பனையாளர்களாக இருப்பது.
ஒரு விவசாய உத்தியோகத்தர்( அது யாராக வேண்டுமானாலும் இருக்கலாம் விவசாய விரிவாக்கம், மாகாணப்பணிப்பாளர் ,பிரதி மாகாணப்பணிப்பாளர்) தவறான இரசாயணத்தை விற்பனை செய்ய ஊக்குவிக்க முடியும் என்றால் கற்பனை செய்து பாருங்கள் நாட்டுக்குறுக்கே அமோனியம் சல்பைட் இந்தியாவிலிருந்து இறங்கியது போல இன்னமும் எத்தனை இரசாயணங்கள் இறங்கியுள்ளனவோ இறங்க உள்ளனவோ???

Rajeevan Ravinathan

Comments