தரையோடு பறக்கும்
வண்ணாத்திப் பூச்சிகள்
மண்ணுடன் சினேகம் கொள்கின்றன
மண் தீக்குழம்புடன் சினேகம் கொள்கின்றது
மண்ணுடன் சினேகம் கொண்ட வண்ணாத்திப் பூச்சிகள்
உறவு கொள்கின்றன
எந்தக் குறிப்பிட்ட திசையையும்
பின்பற்றாது வண்ணாத்திப் பூச்சிகள்
வாழ்க்கை நடத்துகின்றன
எனினும்
எந்தத் தரையோடும் பறக்கும்
வண்ணாத்திப் பூச்சியின் திசையும்
அதற்கு மட்டும் தெரிகிறது
25.01.2016
Comments
Post a Comment