அமைதியான கோபம் (சிறுகதை)



திடீரென்று ஒரு நாள் கோபத்திற்கு தன்மேல் வெறுப்பு வந்தது. நீண்ட யோசனைக்குப் பிறகு தன்னால் எப்போதும் தீமையே நடப்பதாகவும் தான் ஒரு கொழுந்து விட்டறியும் தீயாக இருப்பதாகவும் அதனால் தன்னை சார்ந்தவர்களையே பாதிப்பதாகவும் காலமாக பலர் இதையே சொல்லி தன்னை காயப்படுத்துவதாகவும் கோபம் நினைத்துக் கொண்டது எனவே இதிலிருந்து விடுதலை பெறுவதற்காக அமைதியை நோக்கி பயணம் செய்தது. அமைதியின் இருப்பிடம் என்பதை பல இடங்களில் தேடியது காடு மேடு எல்லாம் தேடியது ஓடியும் பறந்தும் தேடியது காலமாக இந்த தேடல் தொடர்ந்து கொண்டே இருந்தது ஒரு வழியாக அமைதி ஒரு மலையின் மேல் இருப்பதை அறிந்து கொண்டது எனவே அமைதி அடைந்து தான் அமைதியில் கலந்து விடலாம் என்று அமைதியை நோக்கி மலை மேல் ஏறியது கோபத்தை போலவே இன்னும் வேறு சிலரும் அமைதியை நோக்கி பயணப்பட்டார்கள். இப்படி தினமும் அமைதியை நோக்கி பலர் படை எடுப்பதால் தனது அமைதி கெடுவதாக நினைத்து அமைதி கோபம் கொண்டது. இறுதியில் தனது அறியாமையை நினைத்து கவலை கொண்டது, இதற்கு புத்திசாலித்தனத்தினை நாடி ஆலோசணை கேட்டது. 

அமைதி தனித்து இருப்பதால் தான் இப்படி எல்லாரும் வருகிறார்கள் அப்படி வரும் எல்லோரையும் சமாளிக்க முடியாது போகிறது எனவே அமைதியின் கிளைகளை பல இடங்களில் திறக்கும்படி கூறியது புத்திசாலி. இந்த யோசனை நன்று என யோசித்த அமைதி பல இடங்களில் பல கிளைகளை ஆரம்பித்தது.

ஆக உலகமே அமைதியடைந்து விட்டதா 

அது தான் இல்லே, இப்போதெல்லாம் இந்த கிளைகளுக்கு இடையில் தான் சண்டையே. கோபம் அமைதியின் கிளைகளுக்கு இடையே தங்கிவிட்டது. அது தன்னே தானே வெறுப்பதை நிறுத்திவிட்டு தன்னே நினைத்து பெருமை கொள்ளத்தொடங்கி விட்டது.


Rajeevan Ravinathan 





Comments