அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு- நவீன விளக்கம்

ஆதித்  தன்மையை அடைவதற்கான முயற்சிதான் மனிதர்களுடைய  வாழ்க்கை ஆகும். அந்த ஆதித் தன்மையை அடைவதற்கு  ஆதி தன்மையை தழுவிய பல செயற்பாடுகள்தான் செய்ய வேண்டும் தமிழில் எப்படி அ என்பது முதன்மையான எழுத்தாகவும் ஏனைய எழுத்துக்களுக்கு ஆதாரமாகவும் காணப்படுகிபடுகின்றதோ, அது போல உலகின் அனைத்து செயல்களுக்கும் நிகழ்வுகளுக்கும்  ஆதித் தன்மை  ஒன்று உண்டு உள்ளது.
அது உலக உருவாக்கமாக இருக்கலாம் ஒரு கண்டுபிடிப்பாக இருக்கலாம் எதுவாகிலும் ஆதித்தன்மையை தழுவியே அனைத்தும் உருவாக்கப்பட்டது.
உலக உருவாக்கம் என்று பார்த்தால் பெரு வெடிப்பின் மூலம் அண்டங்கள் உருவாக்கப்பட்டது. அதுபோல முதலாவது அமினோ அமிலத்தின் உருவாக்கத்தின் மூலமே காணப்படுகின்ற பரந்த  விரிந்த உலகம் உருவாக்கப்பட்டது.

அனைத்து கண்டுபிடிப்புகளும் ஒரு ஆதாரத்தை வைத்துக் கொண்டு உருவாக்கப்பட்டது. அவை பின்னர் பரிணாமணிக்கப்பட்டு அடுத்தடுத்த கண்டுபிடிப்புகள் விரிவடைந்து சென்றது. கண்டுபிடிப்பு என்பது உருவாக்கப்பட்ட பிறகுதான் அது கண்டுபிடிப்பு உருவாகும் வரை அது இயற்கையில் இருந்த ஒரு விடயம் தான். உதாரணமாக அணுசக்தி இயற்கையில் ஏற்கனவே இருந்தது அதை கண்டுபிடித்ததற்கு பிறகு அதை கண்டுபிடித்ததற்கு ஒருவர் தனக்கான பெயரை எடுத்துக் கொண்டார்.

உலக வரலாற்று எடுத்துக் கொண்டால் உலக வரலாறு இங்கிலாந்து அல்லது அமெரிக்காவிலிருந்து ஆரம்பிப்பதாக சொல்லுவர்.

கொலம்பஸினுடைய பயணம் தான் உலக வரலாற்றின் ஆரம்பத்தின் தொடக்கம் இன்று நாம் படித்திருப்போம் முன்னதாக கூட உலகின் பல நாடுகளில்  பலதரப்பட்ட பல மொழி பேசும் மக்களவாழ்ந்து வந்தார்கள் ஆனால் உலக எனும்போது நாடுதான் பயணத்தை தொடங்கிய அதிலும் குறிப்பாக கொலம்பஸை குறிப்பிடுவதுண்டு ஏனெனில் அவர் முன்னோடியாக திகழ்ந்தார்

 ஆங்கிலத்தில் இவ்வாறான விடயங்களை ரெஃபரன்ஸ் என்று சொல்லுவர் மேற்கோள் காட்டுவது என்று தமிழில் கூறலாம்.

 ஒருவருடைய செயலை அவருக்கான மதிப்பளிப்பதுடன் அவருடைய செயலின்படிவாக ஏனைய விடயங்களை மேற்கோள் காட்டுவது என்று  இதனை இதைவிட சுலபமாக சொல்ல முடியும் நமது மரபில் தந்தையின் பெயர் அல்லது பாட்டன் பெயர் அல்லது பூட்டன் பெயர் அல்லது பேத்தன் பெயர் அப்படி எமது முன்னோர்களின் பெயர்களை நாங்கள் பயன்படுத்துவது உண்டு. நவீன காலத்தில் கூட ஒருவருடைய பெயர் தந்தையின் பெயர் அதன் பிறகு மகனுடைய பெயர் வரும் ஆக முன்னையவர் ஒருவருடைய பெயரை முன்னிலைப்படுத்தி அடுத்தவர் பெயர் பெறப்படுகிறது இதைத்தான் ஆதித்தன்மையை உணர்ந்து கொள்ளுதல் ஒவ்வொரு விடயத்திலும் நாம் ஆதித் தன்மையை பின்பற்றினால் நமது வாழ்க்கை சுலபமானதாகவும் இயல்பானதாகவும் அமைந்துவிடும்.

அதேபோல் அந்த ஆதித் தன்மையை அல்லது முன்னோர்களை சக்தியை தோற்றத்திற்கு காரணமான விடயங்களை மதிப்பளிக்க வேண்டும். போற்றுதல் வேண்டும்

Rajeevan Ravinathan 

Comments