சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட கிருமி நாசினிகள்



யாழ்ப்பாணம் - ஆவரங்கால் பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் இருந்து சுமார் 40 இலட்ச ரூபாய் பெறுமதியான சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட கிருமி நாசினிகள் மீட்கப்பட்டுள்ளன.

சுமார் 4 மில்லியன் ரூபாய் பெறுமதியான சட்டவிரோதகளை நாசினிகள் கைப்பற்றப்பட்டுள்ளன
குறித்த வர்த்தக நிலையத்திற்கு சொந்தமான களஞ்சியசாலையிலும் இருந்து பெருந்தொகையான கிருமி நாசினிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் இதனை அடுத்து குறித்த வர்த்தக நிலைய உரிமையாளர் மீது விவசாய திணைக்களத்தினால் வழக்கு தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சோலை எனும் முகநூல் பக்கத்தில் பார்க்க கிடைத்தது.
நல்ல விடயம் நடந்துள்ளது.
கடந்த இரண்டு வாரத்துக்கு முதல் நான் ஒரு காணொளியை கூட போட்டு இருந்தேன், காணொளியின் கடைசியில் வடமாகாண விவசாய திணைக்களம் இதுபோன்ற நடவடிக்கைகளை தடுக்க வேண்டும் என கேட்டு இருந்தேன். [ அந்த காணொளியை பார்த்து தான் நடவடிக்கை எடுத்தார்கள் என்று கூற நான் வரவில்லை...]
அந்த காணொளி எடுத்த நேரம் எனக்கு , அதற்கு முதல் கிழமை நடந்த ஒரு உண்மை சம்பவத்தின் தகவல் கிடைத்தது.
யாழ்பாணத்தில் பலமில்லியன் பெறுமதியான சட்டவிரோத விவசாய இரசாயணங்கள் இறங்கியதாகவும் Special Task Force அவற்றை கைப்பற்றி குறித்த இரசாயனங்களை அடையாளப்படுத்தவும் அது தொடர்பான சட்ட நடவடிக்கை எடுக்கவும் யாழ்ப்பாண பிரதிமாகாண விவசாயப் பணிப்பாளர் உட்பட ஒரு குழு அழைக்கப்பட்டு இருந்தது.
அழைப்பின் படி குறித்த இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட அவர்களுக்கு கிடைத்தது ஓர் ஆச்சரியம்,குறித்த இரசாயணத்தை இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்தது கடமை விடுப்பில் தற்போது உள்ள ஓர் விவசாய தொழில்நுட்ப உத்தியோகத்தர் ஆவார்,அவர் இப்போது விவசாயம் சார்ந்த செயற்திட்டம் ஒன்றில் வேலை செய்கிறார், வேலை வாங்கி கொடுத்தது மு.வி.பணி.
குறித்த உத்தியோகத்தர் தற்போதும் சரி முன்னரும் சரி மிகவும் செல்வாக்கானவர் அந்த செல்வாக்கினை பயன்படுத்தி முறையற்ற நியமனத்தை கூட பெற்று இருந்தார் என்பது தான் உண்மை. [ தர நிலை எதுவும் இல்லாமல் பண்னை முகாமையாளராக அமைச்சின் செயலாளர் நியமித்து இருந்தார்,சிவா அதனை எதுவும் கேட்காமல் இருந்தார்.. சிவாவும் சுந்தரமும் போனார்கள் அதற்கு பிறகு குறித்த உத்தியோகத்தரும் கடமை விடுப்பில் சென்றுவிட்டார், இருந்த போதிலும் குறித்த பண்ணையினை முறைப்படி இன்னமும் கூட handing over செய்யப்பட இல்லை.]
புதிதாக வந்த வடமாகாண விவசாய பணிப்பாளர் கூட இதனை நெறிப்படுத்த இல்லை. திறமையான ஒரு உத்தியோகத்தர் இப்போது இல்லையாம் என்று ஒரு கூட்டத்தில் புலம்பியதாக அறிந்தேன். [புதுச்செருப்பு என்று அவரை இனிமேல் கருதிவிடக்கூடாது. முழுசாக இரண்டு வருடங்கள் ஆகிறது பதவியேற்று...]
இந்தளவு செல்வாக்கான ஒருவர் முறையற்ற வகையில் இறக்கிய இரசாயனம் தொடர்பான விசாரணையில் வடமாகாண விவசாய பணிப்பாளர், யாழ்ப்பாண பிரதிமாகாண விவசாய பணிப்பாளர் என அனைவரும் இணைந்து எதுவும் நடக்காது போல அனைத்தையும் மறைத்துவிட்டார்கள்.
திருடர்களுக்கும் சட்டத்தை மீறுபவர்களுக்கும் தைரியம் வருவது சட்டத்தை காப்பாற்ற வேண்டியவர்கள் கை கொடுப்பதால் தான் என்ற உண்மையை நான் பல காலம் முன்பே உணர்ந்து இருந்தேன். அதிலும் குறிப்பாக விவசாயம் தொடர்பான விடயங்களில் யார் கேட்க போகிறார்கள், விவசாயிகளுக்கு விவரம் பத்தாது,விவசாய உத்தியோகத்தர்களில் பலர் ஒழுங்காக வேலைக்கு செல்வதில்லை அதனால் அவர்களை மடக்கலாம் இப்படி பல சாதகத் தன்மையை வைத்துக்கொண்டு வாழ்கிறது இந்த கூட்டம்.
அவர்களுக்கு ஒன்றை தான் சொல்வேன்,
Rajeevan Ravinathan

Comments