கொஞ்ச நாளாவே அதிகப்படியான மன ஓட்டங்களில் மாய்த்துக்கொள்ளும்படியான அலைகள் எழுந்து வருகிறது. மிகவும் பாழ்பட்டு போய்விட்டேன் செயழிலந்து வருவதை உணரமுடிகிறது ஆறுதல் வார்தைகள் யார் கூறும்போது கடுமையான சினம் கிளரப்பட்டு விடுகிறது.இந்த நிலையை எண்ணிக்கொண்டிருப்பது கூட பலவீனம் தான்....
மனிதர்களில் சிலர் ஏன் உலகப்பார்வையிலிருந்து விடுபட்டு தனியாக தன்னைத்தானே தேடி அலைந்து சித்தர்கள் ஆக வேண்டும் என்ற நீண்ட நாள் என்னுடைய சந்தேகத்துக்கு துளியளவு விடை கடுமையான சில மாதகாயங்களால் கிடைத்து விட்டது.நல்லூர் தேரடி தேடிப்பிடித்து தேகத்தை ஆறுதல் படுத்த நினைத்தேன் எதற்கும் ஓரிடம் தேவைப்படுகிறது வீட்டுக்குள் அறைக்குள் முகம் புதைத்து தூங்கினால் கூட நான் விடுபடவில்லை என்பதால் இந்த முடிவு..
தேரடி அன்புடன் வரவேற்றது என்னைப்போலவே சிலர் தேரடிக்கு ஆதரவு வழங்கி இருந்தார்கள் காலையில் வெயிலில் காய்ந்த சுவர் என் பிடரிமண்டையை தேடிப்பிடித்து வெட்கையை வெளித்தள்ளிக்கொண்டிருக்க கண்ணும் தன்பங்கிற்கு கண்ணீரை தரைச்சிந்துகிறது;
வெள்ளிக்கிழமை பக்தர்கள் கூட்டம் மெல்ல மெல்ல வந்து போக பக்கத்து தேரடி வாசிகள் பொது பலசேனா,சிவசேனா வழியே அரசியல் பூதத்தை சிறு குப்பிபோத்தல்களில் அடைக்க முற்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்;
கோயில் அர்சகர் ஒருவர் தனது முதுமையின் தோற்றத்தை நடை வழியே இழுத்து இழுத்து போகிறார்;
சிறு குழந்தைகள் அங்குமிங்கும் ஓட அவர்களை பின் தொடர்ந்து காதலியை விரட்டும் காதலன் போல பின் பெற்றோர்கள் பின் தொடர்கிறார்கள்;
தீபம் நன்றாகவே சுடர் விட்டெரிந்து கொண்டிருந்தது;
கால்களை கழுவி தம்மை சுத்தம் செய்யும் சிலரைப்பார்த்து மனதை சுத்தம் செய்ய ஒரு திரவத்தை மனது சிந்திக்க தொடங்குகிறது;
சில கைபேசி அலைப்புக்கள் தனிமையை முழுங்கி விடுகிறது;
காதலர்கள் தமது வாழ்வியல் கயட்டங்களுககு முடிவுகளை அடுத்தவர் கைகளில் தேடிக்கொணடு இருக்கிறார்கள்;
ஏற்கனவே தெரிந்த சில முகங்களும் என்னைத்தெரிந்த சிலமுகங்களும் கடந்து போய்கொண்டிருக்க அவர்களை ஏமாற்றிட கண்கள் தயாராகி வெற்றி அடைந்து கொண்டது;
சில கணவான்கள் தாம் ஏன் கணவான்கள் ஆக மாறியதை நினைத்து கவலைப்பட்டவர்கள் போல இருந்தார்கள்;
திருமனமாணவர்கள் ஆகாதவர்கள் சிறுவர்கள் என எத்தனை பேர் வந்தாலும் பூட்டிய கதவுக்குள் இருந்து என்ன செய்கிறானோ?? இந்த இரண்டு லட்டு சாப்பிடும் வசதி படைத்த ஓம்முருகா;
சிலது என் கண்புலத்திற்கும் கருத்து புலத்துக்கும் எய்தப்படாமல் போய்கொண்டிருந்தது;
இப்படி பராக்குப்பார்த்துக்கொண்டு தான் நான் உலகத்திலிருந்து என்னை தனிமைப்படுத்திக்கொள்கிறேன் என்னை செய்ய எவ்வளவோ இருக்கு இன்னும் எண்ட ஞானம் அவ்வளவு இலகுவில் எய்தப்படுவதில்லை இது கடந்து போக வேண்டியது கொஞ்சம் நாள் எடுக்கும் போல ஆக மொத்ததில் ஞானம் எய்தப்பட இன்னும் நிறையபடனும்
Rajeevan Ravinathan

Comments
Post a Comment